×

கேரளாவில், ஒரே ஹோட்டலில் உணவருந்தி, உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 178 ஆக அதிகரிப்பு!!

திருவனந்தபுரம் : கேரளாவில், ஒரே ஹோட்டலில் உணவருந்தி, உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 178 ஆக அதிகரித்துள்ளது. திருச்சூர் மாவட்டம் மூணுபீடிகையில் உள்ள தனியார் ஹோட்டலில் சாப்பிட்ட ஏராளமானோருக்கு காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்பட்டது. இதுகுறித்து, ஆய்வு நடத்திய அதிகாரிகள் ஹோட்டலில் பரிமாறப்பட்ட மயோனைஸே, இதற்கு காரணம் என கண்டறிந்தனர். இதனையடுத்து, அந்த ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது. இதனிடையே திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உசைபா என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

The post கேரளாவில், ஒரே ஹோட்டலில் உணவருந்தி, உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 178 ஆக அதிகரிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Moonupedikai, Thrissur district ,
× RELATED கேரளாவில் பள்ளம் தோண்டியபோது...