×

தூத்துக்குடியில் அரசு வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை

 

தூத்துக்குடி, மே 28: தூத்துக்குடியில் அரசு வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, பொத்திகுளம் கிராமம், வடக்கு தெருவைச் சேர்ந்த சித்திரைவேல் மகன் தவக்குமார் (22), பிஇ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார். இவர் தூத்துக்குடியில் தங்கியிருந்து, ரயில்வே போட்டித் தேர்வுக்கான பயிற்சி மேற்கொண்டு வந்தார். பல தேர்வுகள் எழுதியும் இவருக்கு அரசு வேலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் மன அழுத்தத்தில் இருந்த இவர், தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் கடந்த 25ம் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது.இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தூத்துக்குடி மத்திய பாகம் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

 

The post தூத்துக்குடியில் அரசு வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Thoothukudi ,Tavakumar ,Chithraivel ,North Street ,Kadaladi ,Pothikulam district ,Ramanathapuram district ,PE ,Mechanical ,Engineering ,
× RELATED இருசக்கர வாகனங்களில் தனியாக...