×

தொழிலதிபரிடம் ஐபோன் பறித்த இளஞ்சிறார் உள்பட 2 பேர் கைது

 

தூத்துக்குடி, மே 28: தூத்துக்குடியில் நடைபயிற்சிக்கு சென்ற தொழிலதிபரிடம் ஐபோனை பறித்துச் சென்ற இளஞ்சிறார் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மேலசண்முகபுரம், வண்ணார் முதல் தெருவைச் சேர்ந்த ஞானசெல்வராஜ் மகன் ரமேஷ்செல்வகுமார்(51), பழைய உடைந்த பொருட்களை இறக்குமதி செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் காலையில் தூத்துக்குடி தெற்குபீச் ரோட்டில் முனியசாமி கோயில் அருகே ஐபோனில் பேசியபடி நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது பைக்கில் வந்த 2 பேர், அவரிடம் இருந்த ஐபோனை பறித்துச் சென்றனர். இதுகுறித்து ரமேஷ்செல்வகுமார் அளித்த புகாரின்பேரில் தூத்துக்குடி தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்கு பதிந்து விசாரணை செய்தார். இதில் தூத்துக்குடி திரேஸ்புரம், மாதவநாயர் காலனியைச் சேர்ந்த சேர்ந்த முத்துவேல் மகன் இசக்கிமுத்து(எ)தொம்மை(21) மற்றும் 17 வயது இளஞ்சிறார் ஆகியோர் ஐபோனை பறித்துச் சென்றது தெரிய வந்தது. இவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், இவர்களிடம் இருந்து ஐபோனை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இசக்கிமுத்து மீது ஏற்கனவே தூத்துக்குடி மாநகர காவல் நிலையங்களில் 2 வழக்குகள் உள்ளது.

 

The post தொழிலதிபரிடம் ஐபோன் பறித்த இளஞ்சிறார் உள்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Youngir ,Thoothukudi Malachanmupuram ,Vannar First Street ,Ghanaselvaraj ,Rameshselwakumar ,
× RELATED தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில்...