×

லாரி பறிமுதல் 40 சதவீத மானியத்தில் கொய்யா பதியன் இலவசமாக விநியோகம் முத்துப்பேட்டை விவசாயிகள் பயன்பெறலாம்

 

திருத்துறைப்பூண்டி, மே 28: முத்துப்பேட்டை வட்டார விவசாயிகள் 40 சதவீத மானியத்தில் கொய்யா பதியன் இலவசமாக வழங்கப்பட உள்ளதாக தோட்டக்கலை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் முத்துப்பேட்டை வட்டாரத்தில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்ற ஆண்டு வழங்கப்பட்ட கொய்யா செடிகள் நடவு செய்யப்பட்டு செடிகள் வளர்ச்சி நிலை குறித்து நேரில் ஆய்வு செய்தார். ஆய்வு குறித்து அவர் கூறுகையில், கொய்யா பயிரானது அனைத்து வகையான களிமண் வகை கொண்ட மண் வகைகளுக்கு செழுமையாக வளரக்கூடிய ஒரு பழ பயிராகும். மேலும் அதிக கார அமிலத்தன்மை கொண்ட முத்துப்பேட்டை பகுதியில் கொய்யா நன்கு வளர்வதை ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வின் முடிவில் அப்பகுதி விவசாயிகளுக்கு கொய்யா செடிகள் மானியத்தில் இவ்வாண்டு தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 277 கொய்யா பதியன்கள் 40 சதவிகித மானியத்தில் இலவசமாக வழங்கப்பட உள்ளது என்றார். மேலும் முத்துப்பேட்டை வட்டாரத்தில் கொய்யா பதியன் மானியம் தேவைப்படும் விவசாயிகள் இதற்கு தேவையான ஆவணங்களான அசல் அடங்கல், கணினி சிட்டா, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஒரு ஆதார் நகல் முத்துப்பேட்டை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பித்து மானியம் பெற்று பயனடைய கேட்டுக் கொண்டார்.

The post லாரி பறிமுதல் 40 சதவீத மானியத்தில் கொய்யா பதியன் இலவசமாக விநியோகம் முத்துப்பேட்டை விவசாயிகள் பயன்பெறலாம் appeared first on Dinakaran.

Tags : Muthuppet ,Thirutharapoondi ,Assistant Director of Horticulture ,Tiruvarur District ,Tiruthurapoondi ,Prince Illasasan ,Muthupet ,Dinakaran ,
× RELATED தண்ணீர் நிரம்பி இருப்பதால்...