×

மருத்துவம், ஊரக நலப்பணிதுறை இயக்குநர் அறிவுறுத்தல் 60வது நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் நேரு சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை

 

தஞ்சாவூர், மே28: இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் 60வது நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் தஞ்சாவூர் வடக்கு வீதியிலுள்ள நேரு சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை வகித்து நேரு சிலைக்கு மாலை அணிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் வக்கீல் அன்பரசன், பொதுச்செயலாளர் மோகன்ராஜ், மாவட்ட மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் பிரபு, மாநகர மாவட்ட துணைத்தலைவர் செந்தில் பழனிவேல், வட்டாரத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, ராஜூ, மாநில பொதுக்குழு உறுப்பினர் கதர் வெங்கடேசன், மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி சசிகலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post மருத்துவம், ஊரக நலப்பணிதுறை இயக்குநர் அறிவுறுத்தல் 60வது நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் நேரு சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை appeared first on Dinakaran.

Tags : Medical, Rural Welfare Department ,Congress ,Nehru ,Thanjavur ,India ,Thanjavur South District Congress ,Thanjavur North Road ,Thanjavur South District ,Medicine, Rural Welfare Department ,Dinakaran ,
× RELATED நாட்டு மக்கள் அடியோடு நிராகரித்த...