×

பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா

 

கிருஷ்ணகிரி, மே 28: கிருஷ்ணகிரி லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில், 38ம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி சயன உற்சவம் நடந்தது. கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில், 38ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 15ம் தேதி துவங்கியது. 16ம் தேதி அன்னபட்சி வாகனம், 17ம் தேதி சிம்ம வாகனம், 18ம் தேதி ஆஞ்சநேயர் வாகனம், 19ம் தேதி சேஷ வாகனம், 20ம் தேதி திருக்கல்யாணம், இரவு கருட வாகனம், 21ம் தேதி யானை வாகனத்தில் நரசிம்மர் நகர் வலம் வந்து அருள்பாலித்தார்.

22ம் தேதி காலை, ரதோற்சவம், 23ம் தேதி காலை அபிஷேகம், பிரகார உற்சவம், இரவு குதிரை வாகனத்தில் நகர்வலம், 24ம் தேதி காலை, சூரிய பிரபை வாகனத்தில் நகர் வலம், இரவு சந்திரபிரபை வாகனத்தில் நகர்வலம் நடந்தது.
25ம் தேதி காலை வசந்த உற்சவம், நகர்வலம், அவபிரதஸ்தானம், இரவு புஷ்ப பல்லக்கில் நகர் வலம் நடந்தது. 26ம் தேதி காலை அபிஷேகம், பிரகார உற்சவம், இரவு துவாதச சாத்துமுறை சேவையும், இரவு சயன உற்சவமும் நடந்தது. இன்று (28ம் தேதி) காலை 108 சங்காபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும் இரவு ஊஞ்சல் உற்சவமும் நடைபெற உள்ளது.

 

The post பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா appeared first on Dinakaran.

Tags : Brahmotsava ,Perumal temple ,Krishnagiri ,Sayana Utsavam ,Krishnagiri Lakshmi Narasimha Swamy Temple ,annual Brahmotsava festival ,Petty ,Lakshmi ,Narasimha Swamy Temple ,Brahmotsava festival ,
× RELATED தலசயன பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை ₹4.56 லட்சம் வசூல்