×

சிவகாசி அருகே வெடி விபத்தில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு

சிவகாசி, மே 28: சிவகாசி அருகே பட்டாசு வெடி விபத்தில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி திருமேனி நகரை சேர்ந்தவர் ராஜபாண்டி. இவருக்கு சொந்தமான இடம் சிவகாசி அருகே செங்கமலபட்டியில் இடம் உள்ளது. இந்த இடத்தில் தகர செட் அமைத்து அலுமினியம் பேப்பர்களை எரித்து சட்டி, சக்கரம் தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருள் உற்பத்தி செய்யப்பட்டது.

மழை காரணமாக சேதம் அடைந்த தகர செட்டை சரிசெய்ய மே 6ல் வெல்டிங் பணி நடந்தது. அப்போது தீப்பொறி பறந்து விழுந்ததில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் திருமேனிநகர் சின்ன கருப்பு, விநாயகர் காலனி மகேந்திரன் (26), சதீஷ்குமார் (27,) திருப்பதி நகர் அன்புராஜ் (27), மீரா காலனி வீரலட்சுமி (28) காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வீரலட்சுமி நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

The post சிவகாசி அருகே வெடி விபத்தில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Rajapandi ,Sivakasi Tirumeni Nagar ,Virudhunagar District ,Sengamalapatti ,
× RELATED சாதனை மாணவிகளுக்கு திமுக சார்பாக கல்வி நிதி உதவி