×

தேனி அல்லிநகரத்தில் மின்தடையை நீக்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு

தேனி, மே 28: தேனி அல்லிநகரத்தில் உள்ள 3 வார்டுகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி 5 வது வார்டு கவுன்சிலர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார். தேனி-அல்லிநகரம் நகராட்சி 5 வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணபிரபா நேற்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனாவிடம் கோரிக்கை மனு அளித்தார். இம்மனுவில் கூறியிருப்பதாவது, தேனி-அல்லிநகரத்தில் 5 வது வார்டில் உள்ள ஓம் சக்தி கோவில் தெருவில் சுமார் 300 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.

இதில் மச்சால் தெருவில் உள்ள 5, 6 குறுக்குத் தெருவிலும், கிணற்றுத் தெருவில் உள்ள முதல் 4 குறுக்குத் தெருவிலும் உள்ள குடியிருப்புகளுக்கு பொம்மையக்கவுண்டன்பட்டியில் உள்ள டிரான்ஸ்பார்மர் மூலம் மின்விநியோகம் உள்ளது. இதில் 500 குடும்பங்களுக்கும் மேலாக மின்சார பயன்பாடு உள்ள நிலையில் சமீபகாலமாக இரவு நேரங்களில் அடிக்கடி மிடின்தடை ஏற்பட்டு வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம், தடையின்றி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

The post தேனி அல்லிநகரத்தில் மின்தடையை நீக்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Teni Allinagar ,Theni ,Teni ,5th Ward ,Collector ,Allinagaram ,Municipality ,Theni Alli ,Dinakaran ,
× RELATED தேனி-பூதிபுரம் சாலையில் 2 மதுக்கடைகளை மூட ஆணை..!!