×

மனைவியுடன் தகாத உறவு இருப்பதாக சந்தேகம் உறவினரை வெட்டி கொன்ற தொழிலாளி

 

திருவனந்தபுரம், மே 28: கேரள மாநிலம் கோட்டயம் அருகே மனைவியுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டதால் உறவினர் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தடுக்க முயன்ற அவரது நண்பருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் பகுதியைச் சேர்ந்தவர் அஜீஷ் (42). தொழிலாளி. கோட்டயம் அருகே உள்ள குமரகம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (40).

அஜீஷின் மனைவியின் உறவினரான ரஞ்சித்துக்கு திருமணம் ஆகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்தநிலையில் ரஞ்சித்துக்கும், தனது மனைவிக்கும் இடையே தகாத உறவு இருப்பதாக அஜீஷுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ரஞ்சித் தன் நண்பர் ரிஜோ(32) என்பவருடன் குமரகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அஜீஷ், அரிவாளால் ரஞ்சித்தை சரமாரியாக வெட்டினார். இதை தடுக்க முயன்றபோது ரிஜோவுக்கும் சரமாரியாக வெட்டு விழுந்தது. இதன்பின் அஜீஷ் அங்கிருந்து தப்பிச் சென்றார். படுகாயமடைந்த 2 பேரும் உடனடியாக கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரஞ்சித் பரிதாபமாக இறந்தார். ரிஜோவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மணர்க்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய அஜீஷை தேடி வருகின்றனர்.

The post மனைவியுடன் தகாத உறவு இருப்பதாக சந்தேகம் உறவினரை வெட்டி கொன்ற தொழிலாளி appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Kottayam ,Kerala ,Idukki district ,
× RELATED ஓடும் பஸ்சிலிருந்து கீழே விழ இருந்த வாலிபரை காப்பாற்றிய கண்டக்டர்