×

அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

 

அலங்காநல்லூர், மே 28:அலங்காநல்லூர் அரசு மேல்நிலை பள்ளயில் 1983ம் ஆண்டு பள்ளி படிப்பை நிறைவு செய்த முன்னாள் மாணவர்கள் 41 ஆண்டுகளுக்குப் பின்பு சந்தித்தனர். கடந்த ஆண்டும் இதேபோன்று முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தற்போது இரண்டாவது முறையாக அலங்காநல்லூர் அரசு மேல்நிலை பள்ளியில் சந்தித்து தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தாங்கள் படித்த வகுப்புகளை பார்வையிட்டும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

முன்னாள் மாணவர்களில் பலர் ஆசிரியர்களாகவும், மற்றவர்களில் முன்னாள் ராணுவத்தினர், மின் வாரிய பொறியாளர், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், சிவில் இன்ஜினியர், கால்நடை மருத்துவர், போக்குவரத்து பணியாளர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் மற்றும் சுய தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். குடும்பத்தோடு தங்கள் பயின்ற பள்ளி வளாகத்தில் ஒன்று கூடி மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

The post அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Alankanallur ,Alankanallur Government Higher Secondary School ,Dinakaran ,
× RELATED அலங்காநல்லூர் அருகே ஓட, ஓட விரட்டி வாலிபர் படுகொலை