×

கோவை புலியகுளம் அரசு மகளிர் கலை கல்லூரியில் 30ம் தேதி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

 

கோவை, மே 28: கோவை புலியகுளம் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பி.காம்., பி.எஸ்சி. கணினி அறிவியல், கணிதம், பி.ஏ. ஆங்கிலம், தமிழ் ஆகிய பிரிவுகள் உள்ளது. இந்த படிப்புகளுக்கு நடப்பாண்டில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் கடந்த 24-ம் தேதி வரை பெறப்பட்டது. இதில், மொத்தம் 6 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. நேற்று மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

இதையடுத்து, மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு வரும் 30-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை நடக்கிறது. அதன்படி, 30-ம் தேதி சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு மதியம் 1 மணியளவில் நடக்கிறது. இதைத்தொடர்ந்து ஜூன் 11-ம் தேதி பி.காம். பாடத்திற்கும், 12-ம் தேதி பி.எஸ்சி. கணினி அறிவியல், கணிதம் பாடத்திற்கும், 13-ம் தேதி ஆங்கில பாடத்திற்கும், 14-ம் தேதி தமிழ் பாடத்திற்கும் கலந்தாய்வு நடக்கிறது. இதனை தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான வகுப்புகள் ஜூலை 3-ம் தேதி துவங்குகிறது.

The post கோவை புலியகுளம் அரசு மகளிர் கலை கல்லூரியில் 30ம் தேதி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு appeared first on Dinakaran.

Tags : Coimbatore Puliyakulam Government College of Arts for Women Admission Consultation ,Coimbatore ,Coimbatore Puliyakulam Women's Arts College ,Dinakaran ,
× RELATED 1.5 கிராம் உயர்ரக போதை பொருள் பறிமுதல்