×

கொடைக்கானலில் மாவட்ட ஐவர் கால்பந்து போட்டி

கொடைக்கானல், மே 28: கொடைக்கானலில் ஜூனியர் ஐவர் கால்பந்தாட்ட போட்டி நடந்தது. இந்த போட்டிகளை கொடைக்கானல் என்எஃப்டி கால்பந்தாட்ட குழுவினர் நடத்தினர். மாவட்ட அளவிலான இந்த போட்டிகளில் 25 அணிகள் கலந்து கொண்டன. இரண்டு தினங்கள் நடந்த கால்பந்தாட்ட போட்டிகளில் இறுதிப்போட்டியில் என்எஃப்டி ஜூனியர் மற்றும் ரெயின்போ அணியினல் கலந்து கொண்டனர்.

இதில் என்எஃப்டி அணியினர் வெற்றி பெற்றனர். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு, கொடைக்கானல் நகர் மன்ற தலைவர் செல்லத்துரை தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மாயக்கண்ணன் முன்னிலை வகித்தார். என்எஃப்டிகால்பந்து அணியின் நிர்வாகி நெப்போலியன் போட்டிகளை ஒருங்கிணைத்தார்.

The post கொடைக்கானலில் மாவட்ட ஐவர் கால்பந்து போட்டி appeared first on Dinakaran.

Tags : District Five Football Tournament ,Kodaikanal ,Junior Five Football Tournament ,Kodaikanal NFT football team ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் மலை கிராமத்தில்...