×

மாவட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு: தடுப்பு நடவடிக்கை தேவை

 

திண்டுக்கல், மே 28: மாவட்ட பகுதிகளில் உள்ள கடைகளில், பிளாஸ்டிக் மற்றும் தடை செய்யப்பட்ட பாலித்தின் பைகள் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல், பழநி, கொடைரோடு, வத்தலக்குண்ட உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான பைகள், கேரி பேக், கப்புகள், டம்ளர்கள், உணவு தட்டுகள் உட்பட பல்வேறு பொருட்கள் பயன்பாட்டில் உள்ளது.

ஹோட்டல்கள், மீன், இறைச்சி கடைகள், சாலையோர உணவங்கள், சாலையோர பழக்கடைகளில் பொருட்கள் வாங்குபவர்களிடம் மக்கும் தன்மையற்ற பிளாஸ்டிக் பைகளில் தான் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதனால் இந்நகர் பகுதிகளில் சமீபகாலமாக பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளன. மக்கும் தன்மையற்ற பாலித்தின் பொருட்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த, நகராட்சி மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் ரெய்டு நடத்தி பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகள், விற்பனை நிலையங்களுக்கு அபராதம் விதித்து வந்தனர். இதனால் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடும் ஓரளவு குறைந்தது. ஆனால் சமீப காலங்களாக மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளதால், அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மாவட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு: தடுப்பு நடவடிக்கை தேவை appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Palani ,Kodairod ,Wattalakunda ,Dinakaran ,
× RELATED பழநி உண்டியல் காணிக்கையில் ‘கை வைத்த’ பேராசிரியை கைது