×

மோடி மீண்டும் முதல்வராவார்’ நிதிஷ்குமார் சொல்வது சரிதான்: தேஜஸ்வியாதவ் உற்சாகம்

பாட்னா: மோடி மீண்டும் முதல்வராவார் என்று நிதிஷ்குமார் சொல்வது சரிதான் என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார். பீகார் மாநிலம் பாடலிபுத்ரா தொகுதியில் நேற்று முன்தினம் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய முதல்வர் நிதிஷ்குமார்,’ மோடி மீண்டும் முதல்வராக வாழ்த்துகிறேன்’ என்று அடுத்தடுத்து 2 முறை கூறினார். இதையடுத்து மேடையில் இருந்தவர்கள் உணர்த்த மீண்டும் தனது பேச்சை சரி செய்து மோடி மீண்டும் பிரதமராவார் என்று நிதிஷ்குமார் கூறினார்.

இந்த பேச்சுபற்றி ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வியாதவ் கூறியதாவது: நிதிஷ்குமார் தனது மனதில் இருந்ததை வார்த்தையால் சொல்லி விட்டார். முதல்வர் கூறியது சரிதான். மோடி மீண்டும் பிரதமராகப் போவதில்லை. ஏனெனில் எங்கள் மரியாதைக்குரிய மாமா நிதீஷ் தனது இதயத்தில் இருந்து பாஜவை அகற்ற விரும்புவதை நாங்கள் அறிவோம். இதனால் பீகார் எந்த பாரபட்சமும் இல்லாமல் வளர்ச்சியடையும்.

நாங்கள் அவரது பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்கிறோம். நமது கிருஷ்ணர் சிறையில் பிறந்தவர். ஆனால் அவர் (பிரதமர்) இங்கு வந்து எங்களை சிறைக்கு அனுப்புவதாக மிரட்டுகிறார். அவர் நீதிமன்றத்திற்கு மேலே இருக்கிறாரா?. அப்படியானால் விசாரணை அமைப்புகள் அவருக்கு ஏற்ப செயல்படுகின்றன என்பதை இது நிரூபிக்கிறது. அவரது சர்வாதிகாரம். ஜூன் 4 வரை மட்டுமே நீடிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.

The post மோடி மீண்டும் முதல்வராவார்’ நிதிஷ்குமார் சொல்வது சரிதான்: தேஜஸ்வியாதவ் உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Nitish Kumar ,Tejasvyadav ,Patna ,Niddish Kumar ,Tejasvi Yadav ,Bhataliputra ,Bihar ,Chief Minister ,
× RELATED பீகாரில் கனமழை காரணமாக மீண்டும் ஒரு...