×

தேர்தல் முடிவுகளுக்கு பின் காங்கிரஸ் தலைவர் கார்கே பதவி இழப்பார்: அமித் ஷா ஆரூடம்

குஷிநகர்: உத்தரப்பிரதேச மாநிலம், குஷிநகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “முதல் ஐந்து கட்ட தேர்தல் விவரங்கள் என்னிடம் இருக்கிறது. மக்களவை தேர்தலின் 5 கட்டங்களில் பிரதமர் மோடி 310 இடங்களை தாண்டிவிட்டாார். ராகுல்காந்தி 40 தொகுதிகளை கூட தாண்டவில்லை. ஜூலை 4ம் தேதி அகிலேஷ் யாதவ் 4 தொகுதிகளை கூட பெறமாட்டார்.

தேர்தல் தோல்விகளுக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது பதவியை இழக்கக்கூடும். ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை தோல்விகளுக்காக குற்றம்சொல்ல முடியாது. ராகுலின் ஆதரவாளர்கள் ஊடகங்களை சந்தித்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களால் தோல்வியடைந்துவிட்டதாக கூறுவார்கள்” என்றார்.

* 3 ஆண்டுகளில் நீதித்துறை நவீனம்
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த பேட்டியில், ஜூலை ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு தொழில்நுட்பம் முக்கிய உதவியாக இருக்கும். எஸ்எஸ்எஸ் மூலமாக சம்மன் அனுப்பப்படும், 90 சதவீத சாட்சிகள் வீடியோ அழைப்புகள் மூலமாக ஆஜராவார்கள். எப்ஐஆர் பதிந்து 3 ஆண்டுகளுக்குள் நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிக்கும். 3 ஆண்டுகளுக்கு பிறகு நமது குற்றவியல் அமைப்பானது உலகின் மிக நவீன குற்றவியல் நீதி அமைப்பாக இருக்கும் என்றார்.

 

The post தேர்தல் முடிவுகளுக்கு பின் காங்கிரஸ் தலைவர் கார்கே பதவி இழப்பார்: அமித் ஷா ஆரூடம் appeared first on Dinakaran.

Tags : Congress ,president ,Gharke ,Amit Shah Arudam ,Kushinagar ,Union Home Minister ,Amit Shah ,Kushinagar, Uttar Pradesh ,Modi ,Lok Sabha ,Kharge ,Dinakaran ,
× RELATED ஒடிசா காங்கிரஸ் பிரச்சாரக் குழு தலைவர் ராஜினாமா