×

517 பள்ளிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் விநியோகம்

 

அரூர், மே 28: நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக இலவச நோட்டு, புத்தகங்கள் பள்ளிகளுக்கு கொண்டு செல்லும் பணியில் கல்வி துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். வரும் 6ம் தேதி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளிகள் திறக்கும் நாளன்றே பாட புத்தகங்கள், பாட குறிப்பேடுகள் ஆகியவை மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. அரூர் கல்வி மாவட்டத்தில், அரூர் பகுதியில் 157 நடுநிலை பள்ளிகளும், பாப்பிரெட்டிபட்டியில் 83 பள்ளிகள், கடத்தூரில் 69 பள்ளிகள், மொரப்பூரில் 61 பள்ளிகள், காரிமங்கலத்தில் 157 என 517 பள்ளிகளுக்கு பாட புத்தகம் மற்றும் பாட குறிப்பேடுகள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) இஸ்மாயில், உதயகுமார், அருள்முருகன், ஆறுமுகம் ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

The post 517 பள்ளிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Aroor ,Dinakaran ,
× RELATED காதல் கணவனுடன் சென்னை சென்ற இளம்பெண் திடீர் சாவு