×

இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் போட்டி: அமைச்சர் தகவல்

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே போட்டியிடுவார் என அந்நாட்டின் அமைச்சர் தெரிவித்தார். கடந்த 2022ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் போராட்டம் வெடித்தது. இதனால் அதிபர் பதவியில் இருந்த கோத்தபய ராஜபட்சே பதவி விலகினார்.

எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கையில் வரும் செப்டம்பர் 17ல் இருந்து அக்டோபர் 16ம் தேதிக்குள் அதிபர் தேர்தல் நடத்தப்படும் என இலங்கையின் தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ரணில் தனது கருத்தை தெரிவிக்கவில்லை.

ஆனால், முக்கிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவும், ஜேவிபி தலைவர் அனுரா குமார திசநாயகேவும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். நேற்று பேட்டியளித்த இலங்கை சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ,‘‘ அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே நிச்சயம் போட்டியிடுவார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் 2 வாரங்களில் அவர் வெளியிடுவார்’’ என்றார்.

The post இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் போட்டி: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Sri ,Lanka ,election ,Colombo ,Sri Lanka ,minister ,President ,Ranil Wickremesinghe ,Gotabaya Rajapatse ,
× RELATED இந்தியா – இலங்கை பாலம்: ஆய்வு பணி விரைவில் நிறைவு