×

ஆர்மீனியாவில் பிரதமர் பதவி விலக கோரி போராட்டம்

யெரெவன்: ஆர்மீனியாவில் பிரதமர் பதவி விலகக்கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.  கடந்த 1990ம் ஆண்டில் இருந்து தங்களது கட்டுப்பாட்டில் இருந்த பாகு பிராந்தியத்தை அஜர்பைசானிடம் வழங்குவதற்கு ஆர்மீனிய அரசு ஒப்புக்கொண்டது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் முதல் அங்கு போராட்டம் தொடர்ந்து வருகின்றது.

பிரதமர் பஷியான் பதவி விலகக்கோரி பொதுமக்கள் தலைநகர் யெரேவன் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகரில் சாலைகளை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதன் காரணமாக போராட்டக்காரர்கள் மற்றும் போலீசாரிடையே மோதல் வெடித்தது. பின்னர் தடியடி நடத்தி போராட்டக்கார்களை போலீசார் விரட்டியடித்தனர்.

The post ஆர்மீனியாவில் பிரதமர் பதவி விலக கோரி போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Armenia ,YEREVAN ,Armenian government ,Baku region ,Azerbaijan ,Dinakaran ,
× RELATED ஏற்காட்டில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகையால் வாகன நெரிசல்!!