×

அமெரிக்காவில் சூறாவளி: 18 பேர் பலி

ஹூஸ்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ், ஒக்லாஹோமா, ஆர்கான்சாஸ் மாகாணங்களில் சனிக்கிழமை இரவு பயங்கர சூறாவளி தாக்கியது. தொடர் மழை மற்றும் சூறாவளி காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. பொதுமக்கள் மழை மற்றும் சூறாவளியில் சிக்கி தவித்தனர். பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மழை வெள்ளம் மற்றும் சூறாவளி பாதிப்பினால் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெக்சாசில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலரை நேற்று முன்தினம் முதல் காணவில்லை. சுமார் 100 பேர் சூறாவளியின் காரணமாக காயமடைந்தனர். 200க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன. பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 4லட்சத்து 70ஆயிரம் பேர் மின்விநியோகம்இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

The post அமெரிக்காவில் சூறாவளி: 18 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Hurricane in America ,Houston ,Texas ,Oklahoma ,Arkansas ,United States ,Dinakaran ,
× RELATED முதல் டி20 போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியது அமெரிக்கா