×

குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை:தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் குரூப் 4 பதவியில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. இந்த குரூப் 4 தேர்வு ஜூன் 9 அன்று நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நேரடி நியமனத்திற்கு, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி-IV பணிகள்)-இல் அடங்கிய பதவிகளுக்கான கொள்குறி வகை தேர்வு ஜூன்9ம் தேதி காலை நடைபெற உள்ளது.

தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட ஹால் டிக்கெட் தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதி, ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : TNPSC ,CHENNAI ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...