×

கேரளாவில் மயோனைஸ் சாப்பிட்ட 70 பேருக்கு உடல்நல பாதிப்பு: அனைவரும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதி

கேரளா: கேரளா மாநிலம் திருச்சூரில் உணவகம் ஒன்றில் மயோனைஸ் சாப்பிட்ட வாடிக்கையாளர்கள் 70 பேர் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மத்திய கேரள மாவட்டத்தில் உள்ள 3பேடிகை என இடத்தில உள்ள உணவகத்தில் சுமார் 70 பேர் குழிமந்தி என்ற உணவை சாப்பிட்டுள்ளனர். மயோனைஸ் உடன் அனைவரும் உணவை ருசித்துள்ளனர். இதை அடுத்து உணவு சாப்பிட்ட அனைவருக்கும் ஒவ்வாமை ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டது.

பின்னர் உணவு சாப்பிட்ட வாடிக்கையாளர்கள் அனைவரும் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டதற்கு மயோனைஸ் சாப்பிட்டதே காரணம் என கூறியுள்ளனர். மேலும் யாரும் கவலை கிடமான நிலையில் இல்லை என்றும் தெரிவித்தனர். இதனிடையே உணவகத்திற்கு சீல் வைத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

The post கேரளாவில் மயோனைஸ் சாப்பிட்ட 70 பேருக்கு உடல்நல பாதிப்பு: அனைவரும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thrissur, Kerala ,3Pedikai ,central Kerala ,Kulimanthi ,
× RELATED கேரளாவில் பரவும் காய்ச்சல் 310 பன்றிகளை கொல்ல முடிவு