×

குன்னூர், ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் களை கட்டிய சுற்றுலா தளங்கள்

ஊட்டி : குன்னூர் பழக் கண்காட்சியை காண வந்த சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கும் வருகை புரிந்ததால் ஊட்டி நகாில் உள்ள சுற்றுலா தளங்களில் கூட்டம் காணப்பட்டது.
நீலகிாி மாவட்டத்தில் கோடை சீசன் காரணமாக கடந்த இரு மாதங்களாக சுற்றுலா பயணிகள் அதிகளவு ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஊட்டியில் தங்கி இங்குள்ள சுற்றுலா தளங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.நீலகிரி வர சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை கட்டாயம் என்பதால் வழக்கமாக கோடை சீசனுக்கு வரும் கூட்டத்தை விட தற்போது சற்று குறைந்துள்ளது.

இதனிடையே நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் காய்கறி கண்காட்சி,வாசனை திரவிய கண்காட்சி, படகு போட்டிகள் உள்ளிட்டவைகள் ரத்து செய்யப்பட்டன.
மலர் கண்காட்சி,ரோஜா கண்காட்சி மற்றும் பழக்கண்காட்சிக்கு மட்டும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியான 126வது மலர் கண்காட்சி கடந்த 10ம் தேதி துவங்கி 20ம் தேதி 11 நாட்கள் வரை ஊட்டியில் நடந்தது. இதனை சுமார் 1.70 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்க வசதியாக டிஸ்னி வேல்டு,மலை ரயில் அலங்காரம் உள்ளிட்டவைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.இவற்றை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர். இந்நிலையில் கோடை விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் 64வது பழக் கண்காட்சி கடந்த 24ம் தேதி துவங்கியது.

இதற்கு ஏற்றார் போல் மழை குறைந்து நீலகிாியில் இதமான காலநிலை நிலவி வருவதால்,பழக்கண்காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர்.ஞாயிற்றுகிழமை விடுமுறை நாளான நேற்று பழக்கண்காட்சியை பாா்த்து விட்டு சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்தனர். இதனால் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக தாவரவியல் பூங்கா சாலையில் அவ்வப்போது வாகன நெரிசல் ஏற்பட்டது.

இதனை போக்குவரத்து காவல்துறையினர் சரி செய்தனர். போக்குவரத்து கழகம் சார்பில் சுற்று பேருந்துகள் இயக்கப்பட்டது.இதேபோல் ஊட்டி படகு இல்லம்,தொட்டபெட்டா சிகரம், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

The post குன்னூர், ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் களை கட்டிய சுற்றுலா தளங்கள் appeared first on Dinakaran.

Tags : Kunnur, Ooty ,Ooty ,Ooty Nag ,Kunnur ,Nilagi district ,Dinakaran ,
× RELATED ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில்...