×

பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.12 லட்சத்துக்கு காங்கயம் இன மாடுகள் விற்பனை

 

காங்கயம், மே 27: பழையகோட்டை மாட்டுத்தாவணியில் நேற்று காங்கயம் இன மாடுகள் ரூ.12 லட்சத்திற்கு விற்பனையானது. காங்கயம் தாலுகா, நத்தக்காடையூர் பழையகோட்டையில் காங்கயம் இன மாடுகளுக்கான சந்தை நடைபெற்று வருகிறது. இதில் இடைத்தரகர் இல்லாத சந்தை என்பதால் விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது. நேற்று கூடிய வாரச்சந்தைக்கு கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல் போன்ற மாவட்டங்களிலிருந்து விற்பனைக்காக விவசாயிகள் 41 மாடுகளை கொண்டு வருந்திருந்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து மாடுகளை வாங்க விவசாயிகள், வியாபாரிகளும் வந்திருந்தனர். இதில் காங்கயம் இன மாடுகள் ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 69 ஆயிரம் ரூபாய் வரை விற்றது. பசுங்கன்றுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.40 வரை விற்பனையானது. காளை கன்றுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை விற்கப்பட்டது. மொத்தம் 31 கால்நடைகள் ரூ.12 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது என சந்தை மேற்பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

The post பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.12 லட்சத்துக்கு காங்கயம் இன மாடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Old Kottayam ,Kangayam ,Mattuthavani ,Nattakkadaiyur ,Old Kottai ,Dinakaran ,
× RELATED மதுரையில் வாலிபர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு