×

மதுரையில் வாலிபர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

 

மதுரை, ஜூன் 11: மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து(27). இவருக்கு சொந்தமான மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள கடையை பூட்டி வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது கடையை பார்க்கச்சென்றபோது அப்பகுதியைச் சேர்ந்த மாரிச்சாமி என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வெடிச்சத்தம் கேட்டதுடன், தீப்புகையும் கிளம்பியது. அங்கு டூவீலரில் வந்த 3 பேர் பெட்ரோல் குண்டு வீசியதுடன், மாரிமுத்துவை பார்த்து உன்னை கொலை செய்வோம் என்று மிரட்டிச் சென்றனர்.

அவர்கள் வீசிய பெட்ரோல் குண்டு மாரிமுத்து மீது படாமல் கடையின் மொட்டை மாடியில் விழுந்து வெடித்து சிதறியுள்ளது.இச்சம்பவம் குறித்து மாரிமுத்து மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து, அவரை கொலை செய்ய பெட்ரோல் குண்டு வீசிய டூவீலர் ஆசாமிகளை தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மாட்டுத்தாவணி பகுதியில் ெபட்ரோல் குண்டு வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post மதுரையில் வாலிபர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Marimuthu ,Othakadai ,Mattuthavani ,Marichami ,Dinakaran ,
× RELATED மல்லிகையில் மகசூல் பெறும் வழிகள்