×

நாகர்கோவிலில் வடமாநில தொழிலாளி தற்கொலை

 

நாகர்கோவில், மே 27: அசாம் மாநிலம் தோணியூர் பகுதியை சேர்ந்தவர் சுலைமான்(24). இவர் ஒழுகினசேரி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக உள்ளார். இதே ஓட்டலில் வேலைக்கு தோணியூர் பகுதியை சேர்ந்த சியாம்லால்சோபூர்(51) என்பவர் கடந்த 25ம் தேதி நாகர்கோவில் வந்தார். பின்னர் சுலைமான் தங்கி இருக்கும் வடசேரி பராசக்திகார்டன் பகுதியில் உள்ள வீட்டிற்கு சியாம்லால்சோபூர் சென்றார்.

வேலை முடிந்து சுலைமான் வீட்டிற்கு சென்று பார்க்கும் போது சியாம்லால்சோபூர் தூக்கில் சடலமாக தொங்கி கொண்டு இருந்தார். இதுகுறித்து சுலைமான் வடசேரி போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சியாம்லால்சோபூர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post நாகர்கோவிலில் வடமாநில தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : North State ,Nagercoil ,Sulaiman ,Thoniyur ,Assam ,Oluginassery ,Siyamlalsopur ,Northern ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில சிறுவன் பலி