×

ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில சிறுவன் பலி

தாம்பரம்: தாம்பரம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில சிறுவன் பரிதாபமாக பலியானான். பல்லாவரம் – குரோம்பேட்டை ரயில் நிலையங்கள் இடையே, சிறுவன் சடலம் ஒன்று கிடப்பதாக தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், சிறுவனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சடலமாக கிடந்தது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் சோனி (16) என்பது தெரிய வந்தது. உறவினர்களுடன் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனது மாமா வீட்டிற்குச்
செல்வதற்காக அகமதாபாத் – திருச்சி சிறப்பு ரயிலில் முன்பதிவு செய்து நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தான்.

அப்போது சிறுவன் மட்டும் ரயில் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்துள்ளான். இதில், எதிர்பாராத விதமாக ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்ததில், அதே ரயிலில் சிக்கி சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது. தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சிறுவனின் சடலத்தை அவரது குடும்பத்தினரிடம் தாம்பரம் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர். ரயிலில் இருந்து சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில சிறுவன் பலி appeared first on Dinakaran.

Tags : North State ,Tambaram ,Tambaram Railway Police ,Pallavaram-Krompet ,Dinakaran ,
× RELATED வடமாநில வாலிபர் சடலம் மீட்பு