×

நாகர்கோவிலில் கோதுமை ஏற்றி சென்ற லாரி சாலையில் கவிழ்ந்தது

 

நாகர்கோவில், மே 27: நெல்லை மாவட்டம் பணக்குடி பகுதியில் உள்ள மாவு மில்களுக்கு வட மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கோதுமை வருவது வழக்கம். நேற்று பஞ்சாபில் இருந்து ரயில் மூலம் நாகர்கோவில் கோட்டார் ரயில் நிலையத்திற்கு கோதுமை வந்தது. பின்னர் கோதுமை மூடைகள் நெல்லை மாவட்டம் பணக்குடியில் உள்ள மாவு மில்லிற்கு லாரிகள் மூலம் அனுப்பப் பட்டது.

நேற்று மாலை 6 மணி அளவில் கோதுமை மூடைகளை ஏற்றிக்கொண்டு நாகர்கோவில் சுசீந்திரத்திற்கும் இடையே ஆனைபாலம் அருகே ஒரு லாரி சென்றுக்கொண்டு இருந்தது. லாரியில் ஏற்றப்பட்ட மூடைகள் சீராக அடுக்கப்படாததால், லாரியில் இருந்து இடதுபுறமாக மூடைகள் சரிய தொடங்கின.

ஆனைபாலத்தில் உள்ள ஒரு பள்ளத்தில் லாரி இறங்கியுள்ளது. அப்போது மேலும் மூடைகள் சரியவே, லாரி நிலையாக செல்ல முடியாமல் இடதுபுறமாக கவிழ்ந்தது. கவிழ்ந்த வேகத்தில் லாரியில் இருந்து கோதுமை மூடைகள் சாலையோரம் சிதறின. சம்பவ இடத்திற்கு நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வேறு லாரிகள் வரவழைக்கப்பட்டு, கவிழ்ந்த லாரியில் இருந்து மூடைகள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.

The post நாகர்கோவிலில் கோதுமை ஏற்றி சென்ற லாரி சாலையில் கவிழ்ந்தது appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Pankudi ,Nellai district ,Nagercoil Kottar ,Punjab ,Dinakaran ,
× RELATED வணிக நிறுவனங்களில் குப்பை எடுக்க பணம்...