×
Saravana Stores

பிதர்காடு வனச்சரகத்தில் யானைகள் கணக்கெடுப்பு நிறைவு

 

பந்தலூர்,மே27: பந்தலூர் அருகே பிதர்காடு வனச்சரகம் பகுதியில் யானை கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்தது. நீலகிரி மாவட்டம்,கூடலூர் வனக்கோட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக யானை கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வந்தது.இந்நிலையில் பந்தலூர் அருகே பிதர்காடு வனச்சரகம் பகுதியில் ரேஞ்சர் ரவி தலைமையில் குழுக்கள் அமைத்து பிதர்காடு,பாட்டவயல்,விலங்கூர்,

நெலாக்கோட்டை, அய்யன்கொல்லி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற கணக்கெடுப்பு 40க்கும் மேற்பட்ட யானைகள் இருப்பது தெரியவந்துள்ளது.கூட்டமாகவும் தனியாகவும் இருந்த யானைகளை தொலைநோக்கு கருவிகள் மூலம் கண்காணித்து கணக்கெடுப்பு பணிகளை மேற்கொண்டு நிறைவு செய்துள்ளனர். மாவட்ட வன அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு கூடலூர் வனக்கோட்டத்தில் மொத்தம் எத்தனை யானைகள் இருக்கின்றது என்ற எண்ணிக்கை தெரிய வரும்.

The post பிதர்காடு வனச்சரகத்தில் யானைகள் கணக்கெடுப்பு நிறைவு appeared first on Dinakaran.

Tags : Bidargad forest ,Bandalur ,Bidargadu forest ,Kudalur forest ,Nilgiri district ,Ranger Ravi ,Dinakaran ,
× RELATED கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில்...