×

தனியார் ஆசிரமத்தில் தங்கியிருந்த மூதாட்டி சாவு

 

ஈரோடு, மே 27: ஈரோடு, சம்பத் நகரை சேர்ந்தவர் மஞ்சுளா (71). இவருக்கு கணவர், குழந்தைகள் கிடையாது. இதனால், தனக்கு சொந்தமான வீட்டை விற்று, அதில் கிடைத்த பணத்தை ஈரோடு, பெரியார் வீதியில் செயல்பட்டு வரும் ஆசிரமத்துக்கு கொடுத்து விட்டு அங்கேயே தங்கி இருந்துள்ளார்.இந்நிலையில், நேற்றுமுன்தினம் காலையில் மஞ்சுளா படுக்கையில் இருந்து எழுந்திருக்கவில்லை.

ஆசிரம நிர்வாகி அவரை எழுப்பியபோது, அசைவற்று கிடந்துள்ளார். உடனடியாக அவரை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே மஞ்சுளா இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து, ஈரோடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post தனியார் ஆசிரமத்தில் தங்கியிருந்த மூதாட்டி சாவு appeared first on Dinakaran.

Tags : Erode ,Manjula ,Sampath Nagar, Erode ,Periyar Road, Erode ,
× RELATED ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற புகாரில் ஆரணி...