×

காட்டுயானை தாக்கி ஆதிவாசி வாலிபர் படுகாயம்

 

பாலக்காடு, ஜூன் 12: பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே காட்டுயானை தாக்கி ஆதிவாசி வாலிபர் காயமடைந்தார்.  அட்டப்பாடி கூடன்ச்சாளா பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (34). இவர் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வேலை முடிந்து வீட்டிற்கு வரும் வழியில் காட்டு யானை நின்றுள்ளது. யானையை கவனிக்காமல் வந்த ஈஸ்வரனை யானை துதிக்கையால் தாக்கியுள்ளது.

இதில் கீழே விழுந்த ஈஸ்வரன் வலியால் சத்தம் போட்டுள்ளார்.ஈஸ்வரனின் அலறல் சத்தத்தை கேட்ட அருகில் உள்ளவர்கள் காட்டு யானையை சத்தம் போட்டு வனப் பகுதிக்குள் விரட்டி விட்டனர். காட்டுயானை தாக்கி காயமடைந்த ஈஸ்வரனை மீட்டு கோட்டத்தரையிலுள்ள தாலுகா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஈஸ்வரனுக்கு முது கெலும்பு மற்றும் தாடி பகுதியில் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் டாக்டர்கள் இவருக்கு தீவிரசிகிச்சை அளித்து வருகின்றனர்.

The post காட்டுயானை தாக்கி ஆதிவாசி வாலிபர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Palakkad ,Attapadi ,Iswaran ,Attapadi Koodanchal ,
× RELATED சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு...