×

நத்தம் அருகே கோயில் திருவிழாவில் எருது ஓட்டம் நிகழ்ச்சி

நத்தம், மே 27: நத்தம் அருகே புன்னபட்டி ஊராட்சியில் எரமநாயக்கன்பட்டி உள்ளது. இங்குள்ள தொப்பத்தாத்தா சாமி மாலைக் கோயிலில் சாமி கும்பிடு விழா நடந்தது. இதையொட்டி கிராம தேவதைகளுக்கு பழம் வைத்தல் நிகழ்ச்சியும் ஒயிலாட்டம், சேர்வையாட்டம், தேவராட்டம் உள்பட கலைநிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் தொப்பத்தாத்தா சாமி பவனி வருதல் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடந்தது.

பின்னர் மாவிளக்கு, பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து எருது ஓட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதில் 100 க்கும் மேற்பட்ட எருதுகள் கலந்து கொண்டன. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. விழாவில் நத்தம் எம்எல்ஏ ஆர். விசுவநாதன், திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக பொருளாளர் விஜயன், ஒன்றியக் குழுத் தலைவர் கண்ணன் உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post நத்தம் அருகே கோயில் திருவிழாவில் எருது ஓட்டம் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Natham ,Eramanayakanpatti ,Punnapatti panchayat ,Sami Kumpid ceremony ,Doppadatta Sami Malak Temple ,Wailatam ,Devarattam ,
× RELATED நத்தம் செந்துறையில் மக்களுடன்...