×

இலவச மருத்துவ முகாம்

 

நாமக்கல், மே 27: நாமக்கல்லில், தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாமினை நடத்தின. சங்க கவுரவ தலைவர் வாங்கிலி, தலைவர் அருள் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்கள், அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். அனைத்து வகையான உடல் பரிசோதனைகளும் செய்யப்பட்டது. மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு உடல் பரிசோதனை செய்து மருந்து -மாத்திரைகள் வழங்கினர்.

காலை முதல் மாலை வரை நடைபெற்ற முகாமில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உடல் பரிசோதனை செய்து கொண்டனர். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை, இசிஜி, கண் பரிசோதனை, முழு உடல் பரிசோதனை போன்றவை மேற்கொள்ளப்பட்டது. இதில் சங்க செயலாளர் மயிலானந்தன், பொருளார் சீரங்கன், துணைத்தலைவர் பாலசந்திரன், இணை செயலாளர் சந்திரசேகர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

The post இலவச மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Taluka Lorry Owners Association ,Dhanalakshmi Srinivasan Hospital ,Sangha ,President ,Wangili ,Arul ,Camp ,Dinakaran ,
× RELATED பஸ் டிரைவரை கொன்று உடலை ஏரியில்...