×

அனுமதியின்றி எருதுவிடும் விழா

 

கிருஷ்ணகிரி, மே 27: பர்கூர் அருகே அனுமதியின்றி எருது விடும் விழா நடத்திய 7 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் சுமார் 3 மாதங்களுக்கு ஆங்காங்கே எருதுவிடும் விழா நடத்தப்படுவது வழக்கம். ஆனால், தற்போது அரசு அனுமதி பெற்ற கிராமங்களில் மட்டுமே விழா நடத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பர்கூர் ஒன்றியம் கந்திகுப்பம் அருகே உள்ள கனிக்காரன்கொட்டாய் என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் அரசு அனுமதி பெறாமல் எருது விடும் விழாவினை நடத்தியுள்ளனர். இதையடுத்து அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தியதாக ராமகிருஷ்ணன்(60) மற்றும் 6 பேர் மீது, கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post அனுமதியின்றி எருதுவிடும் விழா appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Barkur ,Pongal festival ,Krishnagiri district ,Cremation ceremony without permission ,Dinakaran ,
× RELATED பர்கூர் அருகே இளம்பெண் மர்ம மரணம்: உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதம்