×

14 வயது சிறுமி மாயம்

 

தர்மபுரி, மே 27: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தொட்லாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 24ம் தேதி, சிறுமி பெற்றோருடன் பாலக்கோடு அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது உறவினர் வீட்டில் திடீரென அவரை காணவில்லை. பதறிய பெற்றோர், சிறுமியை அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பாலக்கோடு போலீசில் புகார் அளித்தனர். தன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.

 

The post 14 வயது சிறுமி மாயம் appeared first on Dinakaran.

Tags : Mayam ,Dharmapuri ,Bennagaram Thotlampatti ,Dharmapuri district ,Palakod ,
× RELATED தொழிலாளி மாயம்