×

பல மாதங்களுக்கு பின் ஹமாஸ் மீண்டும் ஏவுகணை தாக்குதல்: இஸ்ரேலில் பதற்றம்

ஜெருசலேம்: கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் படையினர் அங்கிருந்த 1,200 பேரை சுட்டு கொன்றனர். 250 பேரை பணய கைதிகளாக பிடித்து சென்றனர். இதை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், பல மாதங்களுக்கு பின் நேற்று இஸ்ரேலின் டெல் அவிவ்வை நோக்கி ஹமாசின் ஆயுத படை பிரிவினர் திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள், சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனால், ரபா நகரில் இருந்து ஹமாஸ் ஏவிய 8 ஏவுகணைகளை இடைமறித்து அழித்து விட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. இந்த தாக்குதலையடுத்து டெல் அவிவ் நகரில் மக்களை எச்சரிக்கும் விதமாக இஸ்ரேல் சைரன்களை ஒலிக்க விட்டது.பல மாதங்கள் அமைதியாக இருந்த ஹமாஸ் படையினர் திடீரென நடத்திய இந்த தாக்குதலால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

 

The post பல மாதங்களுக்கு பின் ஹமாஸ் மீண்டும் ஏவுகணை தாக்குதல்: இஸ்ரேலில் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : Hamas ,Jerusalem ,Israel ,Gaza ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல் – ஹமாஸ் போர்: போர்நிறுத்த...