×

ஜெனீவா ஓபன் டென்னிஸ் கேஸ்பர் சாம்பியன்

ஜெனீவா: சுவிட்சர்லாந்தில் நடந்த ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், நார்வே வீரர் கேஸ்பர் ரூட் தொடர்ந்து 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். இறுதிப் போட்டியில் செக். வீரர் தாமஸ் மகாச்சுடன் (23 வயது, 34வது ரேங்க்) மோதிய கேஸ்பர் ரூட் (25 வயது, 7வது ரேங்க்) 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை கைப்பற்றினார். ஜெனிவா ஓபனில் கேஸ்பர் ஏற்கனவே 2021, 2022ல் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இது அவர் வென்ற 12வது ஏடிபி சாம்பியன் பட்டம் ஆகும்.

 

The post ஜெனீவா ஓபன் டென்னிஸ் கேஸ்பர் சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Casper ,Geneva Open ,Geneva ,Norway ,Casper Ruud ,Switzerland ,Czech ,Thomas Mahach ,Geneva Open Tennis ,Dinakaran ,
× RELATED பருவநிலை மாற்றம் தமிழக அரசு...