×

பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்: 25 பேர் கைது, 450 பேர் மீது வழக்குப் பதிவு

லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கிறிஸ்தவர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்திய 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் லாகூரில் இருந்து சுமார் 200 கி.மீ. தொலைவில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் சர்கோதா மாவட்டத்தில் முஜாஹித் காலணியில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக வசிக்கின்றனர். இங்குள்ள கிறிஸ்தவர் ஒருவர் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை அவமதித்ததாக கூறி தெஹ்ரிக்-இ-லப்பை பாகிஸ்தான் என்ற இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் முஜாகித் பகுதியில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும் அவர்களின் வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களுக்கு தீ வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மீது கற்களை வீசி இஸ்லாமிய அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் அதிகாரிகள் உள்பட காவல்துறையினர் 10 பேர் காயமடைந்தனர். இதையடுத்து கும்பல் தாக்குதல் நடத்திய அமைப்பை சேர்ந்த 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 450 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

 

The post பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்: 25 பேர் கைது, 450 பேர் மீது வழக்குப் பதிவு appeared first on Dinakaran.

Tags : Lahore ,Pakistan ,Punjab province ,Sarkota district ,Christians ,Mujahid ,Dinakaran ,
× RELATED சாம்பியன் டிராபி தொடர்...