×

தோல்வி பயத்தால் தன்னம்பிக்கையை இழந்த மோடியின் பேச்சில் தடுமாற்றம் தெரிகிறது: சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் பிரசாரம்

பல்லியா: தேர்தலில் தோல்வியடைவோம் என்பதை உணர்ந்த மோடியின் பேச்சில் தடுமாற்றம் தெரிவதாக சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தின் சேலம்பூர் தொகுதி சமாஜ்வாடி வேட்பாளருக்கு ஆதரவாக நேற்று நடந்த பிரசார பேரணியில் கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டு பேசியதாவது: மனிதர்கள் தன்னம்பிக்கையை இழக்கும்போது அவர்கள் பேச்சில் ஒரு தொய்வு தெரியும், தடுமாற்றம் ஏற்படும். நடந்து முடிந்த 6 கட்ட தேர்தல்களில் பாஜவின் தோல்வி உறுதியாகி விட்டது. பாஜ ஆட்சியை இழந்து பிரதமர் பதவி தன்னிடம் இருந்து நழுவுவதை உணர்ந்துள்ள மோடியின் பேச்சில் தடுமாற்றம் தெரிகிறது.

இந்தியா கூட்டணிக்கு மேற்கு உத்தரபிரதேசத்தில் தொடங்கிய வெற்றி அலை தற்போது 7வது கட்டத்தை எட்டி உள்ளது. பாஜ மீதான மக்களின் கோபம் உச்சத்தில் இருப்பதால், இப்போது 400 நம் இலக்கு என்று கோஷமிட்டவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள். நாட்டின் 140 கோடி மக்கள் பாஜ 140 இடங்களில் வெற்றி பெறுவதை கூட கடினமாக்கி விட்டார்கள். தொழிலதிபர்களின் ரூ.25 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன்களை தள்ளுபடி செய்த மோடி அரசு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை. இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் அக்னி வீரர் திட்டம் அகற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post தோல்வி பயத்தால் தன்னம்பிக்கையை இழந்த மோடியின் பேச்சில் தடுமாற்றம் தெரிகிறது: சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Samajwadi ,Akhilesh Prasaram ,Samajwadi Party ,Akhilesh Yadav ,Party ,Uttar Pradesh ,Salempur ,
× RELATED மிரட்டல்கள் மூலம் உருவாக்கப்பட்ட...