×

தகுதியுடைய விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

திருச்சி, மே 26: விவசாயிகள் நபார்டு வங்கியின் பங்களிப்புடன் நன்செய் நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து திருச்சி சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா பாபு விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நபார்டு வங்கியின் பங்களிப்புடன் நன்செய் நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இரண்டாம் ஆண்டுக்கான பயனாளிகள் தேர்வு செய்யும் வகையில் திருச்சி மாவட்டத்திலுள்ள தொட்டியம், உப்பிலியாபுரம் மற்றும் மண்ணச்சநல்லூர் வட்டாரங்களில் இருந்து 5 பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு வங்கி உதவியுடன் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பது குறித்த பயிற்சிகள், மீன்குட்டை, மீன் குஞ்சுகள், ஆடு, கோழி, ஆட்டுத்தீவனம், அசோலா மற்றும் மண்புழு வளர்ப்பு உபகரணங்கள், பசுந்தீவனம், பயிர் சாகுபடி இடுபொருட்கள் ஆகியவை வழங்கப்பட உள்ளன. ஆர்வமுள்ள விவசாயிகள் வரும் ஜூன் 5ம் தேதிக்குள் சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தை நேரில் அணுகவும். இத்திட்டத்தில் பதிவு செய்யும் விவசாயிகள் நீர்ப்பாசன வசதியுடன் குறைந்தபட்சம் 2.5 ஏக்கர் (1 எக்ேடர்) நிலம் உடையவராக இருக்க வேண்டும். இதுகுறித்த மேலும் தகவல்களுக்கு சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையம் 0431-2962854, 9942449786, 8248485377 என்ற எண்களை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராஜா பாபு தெரிவித்துள்ளார்.

The post தகுதியுடைய விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Sirukamani Institute of Agricultural Sciences ,Nansey ,NABARD Bank ,Raja Babu ,Trichy Sirukamani Agricultural Science Station ,Dinakaran ,
× RELATED நன்செய் நிலத்தில் ஒருங்கிணைந்த...