×

இருதரப்பு மோதலில் 7 பேர் கைது

 

ஆர்.எஸ்.மங்கலம், மே 26: ஆர்.எஸ்.மங்கலத்தில் இரு பிரிவினர் இடையே முன்விரோதத்தால் நேற்று முன்தினம் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இப்பிரச்னை தொடர்பாக, ஆர்.எஸ்.மங்கலம் சாகிர் உசேன் தெருவை சேர்ந்த நசீராபானு கொடுத்த புகாரின் பேரில் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், இதில் வல்லமடை மகிம் உட்பட 3 பேரை கைது செய்தனர்.

இது தொடர்பாக பெருமாள்மடை பகுதியைச் சேர்ந்த நிதிஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில், ஆர்.எஸ்.மங்கலம் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த ஆசிக்(24),நவ்புல்(23) உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் அசன் இப்ராகிம் உட்பட 4 பேரை கைது செய்த போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இருதரப்பு மோதலில் 7 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : RS Mangalam ,Nasirabanu ,R.S. Mangalam ,Sakhir Hussain Street ,Dinakaran ,
× RELATED நாகனேந்தல் சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை