×
Saravana Stores

போக்சோ, போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு

 

ஈரோடு, மே 26: ஈரோட்டில் பொதுமக்களுக்கு போக்சோ சட்டம் மற்றும் போதைப்பொருள் தடை குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஈரோடு மாவட்டத்தில், போக்சோ சட்டம் மற்றும் போதைப்பொருள் தடை குறித்து பொதுமக்களுக்கு கிராம விழிப்புணர்வு கூட்டம் நடத்திட எஸ்பி ஜவகர் உத்தரவிட்டார். இதன் பேரில், ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் சார்பில் கல்லுபிள்ளையார் கோவில் வீதியில் நேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு, கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமை தாங்கினார். எஸ்ஐக்கள் ரகுவரன், பரமேஸ்வரன், எஸ்எஸ்ஐ சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பொதுமக்களுக்கு போக்சோ சட்டம் குறித்தும், போதைப்பொருட்கள் தடை செய்தல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும், திருட்டு போன்ற குற்ற சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை எளிதாக அடையாளம் காண வீடுகளிலும், வீட்டின் முகப்பு சாலை பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை (சிசிடிவி) பொருத்திட விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், கலைஞர் நகர், வண்டியூரான் கோவில் வீதி, கல்லு பிள்ளையார் கோவில் வீதி, சொக்காய் தோட்டம், கமலா நகர், திருநகர் காலனி, கேஎன்கே சாலை, ஆகிய பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

The post போக்சோ, போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode district ,SP Jawahar ,Dinakaran ,
× RELATED கோபி அருகே இலவச பட்டா நிலத்தை...