×

பூம்புகார் விற்பனை நிலையத்தில் புவிசார் குறியீடு பெற்ற கைவினை பொருட்கள் கண்காட்சி

ஈரோடு,நவ.8: ஈரோடு, மேட்டூர் ரோட்டில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் புவிசார் குறியீடு பெற்ற தமிழ் நாட்டின் கைவினை பொருட்கள் கண்காட்சி, விற்பனை நேற்று தொடங்கியது. மாநகராட்சி மேயர் நாகரத்தினம் கண்காட்சியை துவக்கி வைத்தார். மேலாளர் அருண் வரவேற்றார்.

இதில், புவிசார் குறியீடு பெற்ற கைவினை பொருட்களான சுவாமிமலை பஞ்சலோக சிலைகள், நாச்சியார்கோவில் பித்தளை குத்துவிளக்குகள், கள்ளக்குறிச்சி மரச்சிற்பங்கள், மாமல்லபுரம் கல்சிற்பங்கள், தஞ்சாவூர் கலைத்தட்டுகள், ஓவியங்கள், தலையாட்டி பொம்மைகள், நெட்டி வேலை, பத்தமடை பாய், நாகர்கோவில் வடசேரி கோவில் நகைகள் போன்றவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சம் ரூ. 250 முதல் ரூ. 2.66 லட்சம் மதிப்பிலான கைவினை பொருட்கள் விற்பனைக்கு உள்ளன. வரும் 23ம் தேதி இக்கண்காட்சி விற்பனை நடைபெறும்.

The post பூம்புகார் விற்பனை நிலையத்தில் புவிசார் குறியீடு பெற்ற கைவினை பொருட்கள் கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : coded ,Bombukar Mall ,Erode ,Tamil Nadu Handicrafts Exhibition ,Bombukar Outlet ,Matur Road, Erode ,Manager ,Arun ,Geo-coded Handicrafts Exhibition ,Dinakaran ,
× RELATED அடையாளம் தெரியாத ஆண் சாவு