×

பள்ளிகளில் நலத்திட்ட பொருட்கள் விநியோகிக்கும் பணிக்கு மாணவர்களை பயன்படுத்த கூடாது: பள்ளிக்கல்வித்துறை அறிவுரை

சென்னை: கோடை விடுமுறைக்கு பிறகு, ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அரசுப் பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப்புத்தகங்கள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்க முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. இதில் 2 கட்டங்களாக நலத்திட்ட பொருட்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

அதன்படி, முதற்கட்டமாக பள்ளிகள் திறக்கப்படும் முதல்நாளில் பாடப்புத்தகங்கள், நோட்டுகள், புவியியல் வரைபடம் போன்றவை வழங்கப்படும் என்றும், 2ம் கட்டமாக கல்வி உபகரணப் பெட்டி, செருப்பு, சீருடை போன்ற நலத்திட்ட பொருட்கள் வழங்கப்படும் என்றும், அதனை ஜூலை மாதம் 15ம் தேதிக்குள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

நலத்திட்ட பொருட்கள் வழங்கும் பணிகளில் எக்காரணத்தைக் கொண்டும், மாணவ, மாணவிகளை பயன்படுத்தக் கூடாது என முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்ட பொருட்கள் குறித்த விவரங்களை கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும், அந்த விவரங்கள் பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

The post பள்ளிகளில் நலத்திட்ட பொருட்கள் விநியோகிக்கும் பணிக்கு மாணவர்களை பயன்படுத்த கூடாது: பள்ளிக்கல்வித்துறை அறிவுரை appeared first on Dinakaran.

Tags : School Education Department ,CHENNAI ,
× RELATED பயிலும் பள்ளியிலேயே வங்கிக் கணக்கு...