×

ஐதராபாத்தில் பரபரப்பு; நடுரோட்டில் நண்பனுடன் பீர் குடித்தபடி இளம்பெண் ரகளை

திருமலை: ஐதராபாத்தில் அதிகாலை நடுரோட்டில் நண்பனுடன் பீர் குடித்தபடி ரகளையில் ஈடுபட்ட இளம்பெண், தட்டிக்கேட்ட பொதுமக்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் புகாரால் போலீசார் இருவரையும் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பீர்ஜாதிகுடாவைச் சேர்ந்த அலெக்ஸ் போடி. இவர் செர்லா தர்னாக்காவை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுடன் நேற்று பதுல்லாகுடா 100 அடி சாலைக்கு காரில் வந்தார். அங்கு சாலையில் நின்றபடி அதிகாலை 6 மணிக்கு பீர் குடித்து கொண்டு சிகரெட் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அதே சமயம் அந்த சாலையில் காலை நடைபயிற்சிக்கு வந்தவர்கள் பொது இடங்களில் மது அருந்தக்கூடாது என தட்டிக்கேட்டனர். அதற்கு மது போதையில் இருந்த இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறில் ஈடுபட்ட நிலையில் நடந்து சென்றவர்களில் ஒருவர் போலீசாருக்கு தகவல் வழங்க முற்பட்டபோது, அவரிடம் இருந்து அந்த இளம் பெண் செல்போனை பறிக்க முற்பட்டார். இந்த சம்பவத்தை நடந்து சென்ற சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர். இந்த வீடியோ வைரலாகிய நிலையில் இருவரும் நடந்து கொண்ட விதம் குறித்து கண்டித்த பொதுமக்கள் நாகோல் போலீசில் புகார் அளித்தனர். அந்த வீடியோ காட்சிகளும் போலீசாரிடம் வழங்கப்பட்டது. இது குறித்து புகாரின் பேரில் நாகோல் போலீசார், இருவர் மீதும் ஐபிசி 341, 504 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ஐதராபாத்தில் பரபரப்பு; நடுரோட்டில் நண்பனுடன் பீர் குடித்தபடி இளம்பெண் ரகளை appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,Thirumalai ,Alex Bodi ,Peerjathikudah ,Hyderabad, Telangana.… ,
× RELATED விரும்பிய பீர்களை குழாயில் பிடித்து...