×

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் எங்களுடையது: அமித் ஷா திட்டவட்டம்

ஹமீர்புர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமானது என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இமாச்சலப்பிரதேசத்தில் ஹமீர்புர் மக்களவை தொகுதியின் பாஜ வேட்பாளரை ஆதரித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அமைச்சர் அமித் ஷா, ‘‘அண்டை நாடு அணுகுண்டு வைத்திருக்கிறது என்கிறார்கள்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எங்களுடையது. அது எங்களுடையதாக இருக்கும். நாங்கள் அதனை எடுத்துக்கொள்வோம். பிரதமர் மோடி மக்களவை தேர்தலின் முதல்ஐந்து கட்டங்களில் ஏற்கனவே 310 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார். ஆறாவது மற்றும் கடைசி கட்டங்களில் 400 தொகுதிகள் என்ற இலக்கை அடைவோம்” என்றார்.

The post பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் எங்களுடையது: அமித் ஷா திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Pak ,Amit Shah ,Hamirpur ,Union Home Minister ,Pakistan ,Kashmir ,India ,BJP ,Lok Sabha ,Himachal Pradesh ,Dinakaran ,
× RELATED தமிழிசை சவுந்திரராஜனை பெண் என்றும்...