×

வெண்மை நிறத்தில் பஞ்சு போல நுரை பொங்கும் பாசன கால்வாய்: அவனியாபுரத்தில் விவசாயிகள் அச்சம்

அவனியாபுரம்: அவனியாபுரம் வெள்ளக்கல் பாசன கால்வாயில் வெண் பஞ்சு போல நுரை மிதப்பதால், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் வெள்ளக்கல் பாசன கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் கழிவுநீர் கலந்து பஞ்சு போன்ற வெண்மை நிறத்தில் நுரை, நுரையாக வந்து கலக்கிறது. இதனால், விளைநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். இவ்வாறு பொங்கும் நுரைகள் சாலையை மறைக்கும் அளவுக்கு பரவுகிறது. காற்றடித்தால் பறந்து செல்லும் நுரைகள் சாலையில் செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மீது பட்டு தெரிக்கிறது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, பாசன கால்வாயில் நுரை பரவுவதை தடுக்க உதவ வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post வெண்மை நிறத்தில் பஞ்சு போல நுரை பொங்கும் பாசன கால்வாய்: அவனியாபுரத்தில் விவசாயிகள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Avaniyapuram ,Vellakkal ,Avaniyapuram, ,Madurai district ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பாஜவின்...