×

உலகில் மிகவும் அரிய குட்டை வகை கேரள வெச்சூர் மாடு கன்று ஈன்றது

 

அவனியாபுரம், மே 25: கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் உலகில் மிகச்சிறிய மாடு இனமாக பதிவாகி இருப்பது கேரளாவின் வெச்சூர் இன மாடுகள். கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வெச்சூர் என்ற கிராமத்தில் இந்த இனத்தினை சேர்ந்த மாடுகள் உள்ளதால், இப்பெயர் பெற்றுள்ளன. இந்த மாடுகள் குறைந்த அளவு உணவை எடுத்துக்கொண்டு பால் கொடுக்கும் திறன் வாய்ந்தவை. மேலும் இந்த வகை மாடுகள் சராசரியாக 87 செமீ உயரம், 124 செ.மீ நீளம் உடையவையாக இருக்கும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது.

இந்த வகை மாடு மதுரை, அவனியாபுரம் பகுதியை சேர்ந்த நாகசுப்பிரமணியன் என்பவரது வீட்டில் வளர்கிறது. இவரது மனைவி சங்கீதா அப்பகுதியில் கோசாலை நடத்தி வருகிறார். இதில் அரியவகை வெச்சூர் குட்டையின மாடுகள் 5 உள்ளன. இவற்றில் ஒன்று தற்போது கன்று ஈன்றுள்ளது. இதன்படி இரண்டரை அடி உயரமுள்ள தாய் பசுவின் குட்டி சுமார் ஒரு அடிக்கும் குறைவாகவே உள்ளது. வெச்சூர் இன கன்றினை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

The post உலகில் மிகவும் அரிய குட்டை வகை கேரள வெச்சூர் மாடு கன்று ஈன்றது appeared first on Dinakaran.

Tags : Avaniyapuram ,Kerala ,Kottayam district ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பாஜவின்...