- மலேசியா முதுநிலை பேட்மிண்டன்
- சிந்து
- கோலா லம்பூர்
- PV
- மலேசியா மாஸ்டர்ஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர்
- ஹான் யுய்
- சீனா
- தின மலர்
கோலாலம்பூர்: மலேசியா மாஸ்டர்ஸ் ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து தகுதி பெற்றார். காலிறுதியில் முதல் நிலை வீராங்கனையான சீனாவின் ஹான் யூயி (24 வயது, 6வது ரேங்க்) உடன் நேற்று மோதிய சிந்து (28 வயது, 15வது ரேங்க்) 21-13, 14-21, 21-12 என்ற செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
விறுவிறுப்பான இப்போட்டி 55 நிமிடங்களுக்கு நீண்டது.மற்றொரு காலிறுதியில் இந்திய வீராங்கனை அஷ்மிதா சாலிஹா (24வயது, 53வது ரேங்க்), சீன வீராங்கனை யின் மன் ஜாங் (27வயது, 17வது ரேங்க்) உடன் மோதினார். அதில் அஷ்மிதா 30 நிமிடங்களில் 10-21, 15-21 என நேர் செட்களில் தோற்று வெளியேறினார்.
The post மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன்: அரையிறுதியில் சிந்து appeared first on Dinakaran.