×

நாகப்பட்டினம் பகுதியில் புதிதாக நடந்த சாலை பணிகளை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு

 

நாகப்பட்டினம், மே 24: நாகப்பட்டினம் நெடுஞ்சாலை நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் கோட்டம் சார்பில் நெடுஞ்சாலைப்பணிகளை தணிக்கை குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். நாகப்பட்டினம் நெடுஞ்சாலை நபார்டு கிராமச்சாலைகள் உட்கோட்டத்தில் மற்றும் நாகப்பட்டினம் உட்பட்ட பகுதிகளில் சாலைப்பணிகள் நடந்தது. இந்த சாலை பணிகளை சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான தணிக்கை குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது சேலம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப்பொறியாளர் துரை, நாகப்பட்டினம் நெடுஞ்சாலை நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் கோட்டப்பொறியாளர் சிவக்குமார், திருச்சி தரக்கட்டுப்பாடு கோட்டப்பொறியாளர், உதவிப்பொறியாளர்கள் மற்றும் இளநிலைப்பொறியாளர் உடன் இருந்தனர். சாலையின் அளவீடு மற்றும் உறுதித் தன்மையை இக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

The post நாகப்பட்டினம் பகுதியில் புதிதாக நடந்த சாலை பணிகளை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,AUDIT COMMITTEE ,HIGHWAY NABARD ,VILLACHALAKH KOTUM ,Nagapattinam Highway ,Nabard Village Houses ,Dinakaran ,
× RELATED சபாநாயகர் அப்பாவு தலைமையில்...