×

திடீரென டயர் வெடித்ததால் கல்லூரி மாணவன் ஓட்டிய கார் சாலையில் கவிழ்ந்து விபத்து: தாய், மகன் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்

 

துரைப்பாக்கம், மே 24: சென்னை போர் நினைவு சின்னம் அருகே, நேற்று காலை வேகமாக வந்த காரின் டயர் திடீரென வெடித்ததால், கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், நல்வாய்ப்பாக தாய், மகன் உயிர் தப்பினர். சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் கல்யாணி (46). இவர் தனது மகன் ரமணகரன் (19) உடன் நேற்று முன்தினம் திருவண்ணாமலைக்கு சென்றுவிட்டு நேற்று காலை காரில் சென்னை திரும்பி கொண்டிந்தார். அவரது மகனும், கல்லூரி மாணவனுமாகிய ரமணகரன் காரை ஓட்டி வந்தார்.

சென்னை போர் நினைவு சின்னம் அருகே, கார் வேகமாக வந்தபோது, திடீரென காரின் இடது பக்க முன் டயர் வெடித்தது. இதில், கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தாறுமாறாக ஓடி, தடுப்பு சுவரில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காரை ஓட்டி வந்த கல்லூரி மாணவன் மற்றும் அவரது தாய் வெளியே வரமுடியாமல் சிக்கி கொண்டனர்.

இதை பார்த்த வாகன ஓட்டிகள் காரில் சிக்கிய 2 பேரையும் காரின் கதவை உடைத்து மீட்டனர். நல்வாய்ப்பாக கல்யாணி மற்றும் அவரது மகனுக்கு எந்த காயங்களுடம் இன்றி உயிர்தப்பினர். இதுகுறித்து பூக்கடை போக்குவரத்து புலனாய்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சிறிது நேரம் போர் நினைவு சின்னம் அருகே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post திடீரென டயர் வெடித்ததால் கல்லூரி மாணவன் ஓட்டிய கார் சாலையில் கவிழ்ந்து விபத்து: தாய், மகன் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Durai Pakkam ,Chennai War Memorial ,Mylapore ,Chennai ,
× RELATED முதலீட்டு பணத்திற்கு 10 முதல் 11% வட்டி...